Tuesday, April 27, 2010

நம் படுக்கை அறையிலும் கூட!




எப்போதும்
எனக்கு மேலே இருந்தே
செயல்பட நினைக்கிறாய்.
நம் படுக்கை அறையிலும் கூட!

7 comments:

S. Philip Raja said...

திரு.ஷங்கர் அவர்கள், நடைமுறை வாழ்வில் பெண்ணினம் நீண்ட காலம் தொட்டு, தினம் தினம் மிக சாதாரணமாய் எதிர்கொள்ளும் ஆணாதிக்க சிந்தனைகள், செயல்களை இந்த கவிதை வரிகளின் மூலம் மிக அழகாக பதிவு செய்து உள்ளார். ஒரு பெண்ணின் சுய விருப்பு, வெறுப்பு என தொடங்கி Iruvar பங்கும் சமமாய் காணப்படும் தாம்பத்ய உறவு வரை எல்லாவற்றிலும் ஆணினம் எவ்வளவு தூரம் ஒரு பெண்ணை அடிமைப்படுத்தி உள்ளது என்பதை அவளது உரைநடையிலேயே சொல்லி இருப்பது சிறப்பு.

இந்த வரிகள், இதை படிக்கும் பெண்களுக்கு தன் எண்ணத்தை வாசித்த அனுபவத்தையும், இதை படிக்கும் ஆண்களை ஒரு கனமேனும் யதார்த்த உண்மையை சிந்திக்கும் வாய்ப்பையும் தரும் என்பது அடியேனின் நம்பிக்கை.

வாழ்த்துக்கள்!!!

sabarinathan subbaramanian said...

இதை படித்தபோது
ஒரு நவீன பெண்ணுடன் வாழும்
சாதாரன ஆணின் உணர்வைப்போல் இருக்கிறது.
இதை பெண்ணியம் என்ற தலைப்பில்
கொடுத்திருப்பதால் மட்டுமே பெண்ணின் உணர்வாக எடுத்துக்கொள்ள முடிகிறது

நளினி சங்கர் said...

நீ சொல்வது சரிதான் சபரி. அப்படி தோனும். அதுக்குதான் பெண்ணியம் லேபிளும், Feminism symbol-யை படமாக போட்டிருப்பதும். அதையும் தாண்டி அப்டிதான் தோனுது-னு சொன்னா என்ன பண்றது-னு எனக்கு தெரியல.
20 வரிகளைக்கொண்ட கவிதையின் கடைசி வரிகளாக இந்த வரிகளை வைத்து எழுதவேண்டும் என்றே ஆரம்பித்தேன். ஆனால் பல யோசனைகளுக்குப் பிறகு இதை இந்த 4 வரிகளோடு முடித்துக்கொள்வதே சிறப்பாக இருக்கும் எனத்தோன்றியதால் ஏற்பட்டது இந்த இறுதிவடிவம். ஒருவேளை 20 வரிகளைக்கொண்ட கவிதையாக இது இருந்திருந்தால் இப்படி ஒரு பின்னூட்டம் இந்த கவிதைக்கு கிடைத்திருக்காதோ! என்னவோ!

ஆனால், ஒரு நவீன பெண் என்பவள் ஆணை அடக்கி ஆள்பவள்
ஒரு சாதரண ஆண் என்பவன் ஒரு பெண்ணிடம் அடிமை வாழ்க்கை வாழ்பவன். என்கிற உன் வரையறை எனக்கு மிகவும் அபத்தமான ஒன்றாக தெரிகின்றது.
நான் சொல்ல முனைந்த கருத்தில் உனக்கு முரண்பாடுகள் இருப்பின் அதை தொடர்ச்சியாக வாதிடலாம். ஆனால் சொல்ல எடுத்துக்கொண்ட ஊடகத்தை நான் கையாண்டிருக்கும் விதத்தைப் பற்றி உன் குறைகள் இருப்பதால் கையாளும் திறனை வளர்த்துக்கொள்கின்றேன் என்பதைத் தவிர, நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

வருகைக்கு நன்றி சபரி.
பி.கு ; சபரியை ஒருமையில் (அவன் இவன் என) விளித்திருப்பது அவன் மீதுள்ள உரிமையிலும் அன்பிலும்தான். சபரி என்னுடைய மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவன். இப்புடி கால வாரி உட்றதில இருந்தெ தெர்ஞ்சிருக்குமே

sabarinathan subbaramanian said...

நாகரிக மனிதனின் மிக இயல்பான பழக்கம்
இன்னமும்கூட அந்தரங்கமானவைகளில் ஆர்வமுடனிருப்பது.
‘’நம் படுக்கை அறையிலும்கூட’’ என்ற தலைப்பு
என்னை நேரடியாக விசயத்திற்கு கொண்டு சென்றுவிட்டது
தலைப்பு மற்றும் படங்களை முதல்முறை சரியாக கவனிக்கவில்லை…

‘’ஒரு நவீன பெண் என்பவள் ஆணை அடக்கி ஆள்பவள்
ஒரு சாதரண ஆண் என்பவன் ஒரு பெண்ணிடம் அடிமை வாழ்க்கை வாழ்பவன்’’
என்பதெல்லாம் நிச்சயம் என்னுடைய வரையரை கிடையாது…
உனக்கு புரியுமென்று அந்த வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தேன்…
பொதுதளம் என்பதால் தவறாக அர்த்தப்பட வாய்ப்பு இருக்கிறது.
உனது பதிலுக்கு மிகவும் நன்றி.

பெண்ணியம், பெண் விடுதலை இவைகளை தவறாக
புரிந்துகொண்டிருக்கும் நவீன பெண் என்றும்
ஆணாதிக்கம், பெண்ணியம், பெண் விடுதலை இவைகளைப்பற்றி
எந்த கருத்தும் இல்லாத ஒரு அப்பாவி ஆண் என்றும்
எழுதியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்…

எல் கே said...

யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அனைவரும் சமம் :)

Jayaprakashvel said...

சங்கர் சொல்வது மாதிரி ஒரு மிக நீளமான கவிதையின் கடைசி சில வரிகளாக இவை இருந்திருந்தால் சபரி சொன்னது போல இருந்திருக்கும். இது இவ்வளவு சின்னதாக இருப்பதே அதன் சிறப்பு என நான் நினைக்கிறேன். இப்படி சொல்லிவிட்ட்டதால் இதை நான் சிறப்பான கவிதை என நான் சொல்ல வரவில்லை. இது மோசமான கவிதை அல்ல. அது வரையில் நான் நிற்கிறேன்.

சபரியும் சங்கரும் இங்கே எழுதி உள்ளவற்றைப் பார்த்தால் இந்தப் பக்கமே தலை காட்ட பயமாக இருக்கிறது. சங்கரின் பாஷையில் பயங்கரம். இரண்டு பேருமே நண்பர்கள் என்பதால் நானும் இங்கே.

ஆனால் கவிதையின் பின்னான இரு வாதங்களிலும் உள்ள உண்மை இங்கெ எழுத வைக்கிறது. சங்கர் இதை பெண்ணியம் என்று முத்திரையிட்டதில் எனக்கு ஆரம்பத்திலேயெ சின்ன நெருடல். அப்படி தனியாக ஏதும் இருக்கிறாதா என எனக்கு தெரியவில்லை. தனியாக தேவை இல்லை என்பது எனது கருத்து. இதை சங்கரின் வார்த்தைகளாகவே கொள்வதில் தவறேதும் இல்லை. ஒரு பெண்ணை போல் எழுதுவதை விடவும் பெண்களை புரிந்து கொண்டதற்கு லேபில் தேவை இல்லை. இதை ஒரு பெண்தான் எழுத வேண்டும் என்பதும் இல்லை. வயசாகி விட்டதால் குழப்பியிருப்பேன். சங்கரும் சபரியும் மன்னிப்பார்களாக.

நளினி சங்கர் said...

ஜேபி யாருக்கோ வயசாகிடுச்சினு சொல்லியிருக்கிங்களே... யாருக்கு?

பெண்ணியம் என லேபில் போட்டு இருந்தாலும் இதை பெண்ணியம் பேசும் கவிதையாக சபரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னொருபுறம் 'பெண்ணியம்' என தனியாக ஒன்று இருக்கின்றதா என்ற அதிரடியான கேள்வியினை கேட்கிறார் ஜேபி. இரண்டும் வெவ்வேறு திசைகளுக்கு என்னை இழுத்துச்செல்ல முயலும் கருத்துக்கள். இருவரின் ரசனையினையும் மிகவும் மதிப்பவன் என்பதால் என்ன மறுமொழி இடுவது என இவ்வளவு காலம் குழம்பிப் போயிருந்தேன்.

/////வயசாகி விட்டதால் குழப்பியிருப்பேன். சங்கரும் சபரியும் மன்னிப்பார்களாக///// என்று என்னை இவ்வளவு குழப்பிவிட்டுவிட்டு ஜேபி எஸ்கேப்...

வந்த வேலை முடிந்துவிட்டதால் சபரி தலைமறைவு...

கற்றுக்கொண்ட பாடம்; இனி கவிதைக்கு 'கவிதை' என ஒரே ஒரு லேபிள் தான். ஒருவேளை இதுவும் தவறு என நாளை என்னிடம் யாராவது நிருபித்தால் என்ன பண்ண போறன்னுதான் தெர்ல... :):)

அண்மைய இடுகைகள்