Monday, May 24, 2010

மருத்துவமனைகள் இரக்கமற்றவை

தையல்களாலும் பிளாஸ்திரிகளாலும்
மறைந்து போயிருக்கும் முகங்கள்

சிறிது நேரத்தில் நிகழப்போகின்ற
தன் அன்புக்குரியவர்களின்
நிரந்தரப் பிரிவை ஏற்க மறுத்து
சுவரையே வெறித்துக்கொண்டிருப்பவர்களின் பெருமூச்சுக்கள்

பழுப்பு நிற சால்வை ஒன்றினால் சுற்றப்பட்ட
காய்ச்சலுற்ற குழந்தையுடன்
நீண்ட நேரமாக மருத்துவரின் வருகைக்காக
காத்திருக்கும் ஒருவளின் படபடப்புகள்

வலிகளைப் பொறுக்கமுடியாத முனகல்கள்
முனகல்களைப் பொறுக்கமுடியாத வலிகள்

என, இவை எவற்றிற்கும்
எந்தச் சலனமும் அடையாத
மருத்துவமனைகள் இரக்கமற்றவை.

37 comments:

கவிதா பேச்சி said...

intha kavithayail ovvoru paravum ovvaru vithamana valiyayum, nammudaiya anbukkuriyavarahalaiyum nabahap paduthi konde thaan irukkinrathu...Intha kavithaiyil ulla miha sirantha varihal ivai...."வலிகளைப் பொறுக்கமுடியாத முனகல்கள்
முனகல்களைப் பொறுக்கமுடியாத வலிகள்"...intha varihalin aazham nenjai pisaiya vaikkinrathu... ore vaarthaiyil ungal kavithai arputham...Keep wirtting...

நளினி சங்கர் said...

நன்றிங்க மேடம்

VELU.G said...

//என, இவை எவற்றிற்கும்
எந்தச் சலனமும் அடையாத
மருத்துவமனைகள் இரக்கமற்றவை.
//

உண்மைதாங்க

கவிதை நல்லாயிருக்கு

Karthik said...

உங்க கவிதை மிகவும் அருமை. உங்கள் கவிதை இது போன்ற மருத்துவமனைகளுக்கு சட்டை அடி. மற்றவர்களின் உணர்வுகளை அப்படியே வரிகளால் வடித்திருப்பது அருமையோ அருமை.

நளினி சங்கர் said...

நன்றி வேலு.ஜி

உங்களுடைய வலைதளத்தை பார்த்தேன். கலக்கி இருக்கிறீர்கள்.

நளினி சங்கர் said...

நன்றி கார்த்தி..

// உங்கள் கவிதை இது போன்ற மருத்துவமனைகளுக்கு சட்டை அடி. //

கொஞ்சம் ஒவரா இருக்கு.
சாட்டை-ல அடிச்சது போல இருக்க வேண்டும் என்பது இந்த கவிதையின் நோக்கம் அல்ல கார்த்தி.

வேறு என்ன நோக்கம்-னு கேட்டுடாதிங்க... மாட்டிக்குவன்.

Jayaprakashvel said...

சங்கர் ரொம்ப நல்லா இருக்கு. #####பழுப்பு நிற சால்வை ஒன்றினால் சுற்றப்பட்ட
காய்ச்சலுற்ற குழந்தையுடன்
நீண்ட நேரமாக மருத்துவரின் வருகைக்காக
காத்திருக்கும் ஒருவளின் படபடப்புகள்####
இந்த வரிகள் என்னை இன்னும் கவிதையுடன் நெருக்கம் கொள்ள வைத்தவை. நான் என் தங்கை குழந்தையுடன் அவளின் காய்ச்சலுக்காக தங்கையை அழைத்துப் போக முடியாத நிலையில் இரவு முழுவதும் காஞ்சி காமகொட்டி பீட குழந்தகள் மருத்துவமனையில் தவித்திருந்ததும் பிரார்த்த்தித்ததும் நினைவுக்கு வருகின்றன. இது பொன்ற நேரங்களில் தான் கடவுள் என்று ஒன்று தேவை என படுகிறது. வேறு வழி இல்லாதபோது இருப்பதாய் என்னிக் கொன்டு பிரார்த்திக்கவாவது அந்தக் கடவுள் தேவை.

மற்றபடி கவிதை முதலிலேயெ சொன்ன மாதிரி ரொம்ப நல்லா இருக்கு.
$$$$
வலிகளைப் பொறுக்கமுடியாத முனகல்கள்
முனகல்களைப் பொறுக்கமுடியாத வலிகள்$$$$$
இந்த வரிகள் யொசித்தால் மிகவும் ஆழமாக இருந்தாலும் வெளிப்பார்வைக்கு ஒரு சாதாரன ஒசை நயத்தையெ நினைவு படுத்துகிறது. அது என் தப்பென்று அந்த வரிகளை யொசித்ததும் தெரிந்தது. மிகவும் நல்ல வரிகள். தொடர்ந்து நிரைய எழுதுங்கள் வாழ்துக்கள்.

Karthik said...

சங்கர் அவர்களுக்கு,

நான் சட்டை அடி என சொன்னதிற்கு அர்த்தம் வேறு, இதே போல் மனித உள்ளங்களின் உணவுகளை புரிந்துகொள்ளத மருத்துவர்கள் படித்தால் அவர்களின் மனதில் சட்டையின் வலியினை உணர்வகள் என்ற கருத்தில் சொன்னேன்.

எனினும் உங்கள் பதிலுக்கு நன்றி

நளினி சங்கர் said...

ரொம்ப நன்றி ஜேபி

ரொம்ப நேரமா உங்களுடைய கருத்துக்காகத்தான் காத்துக்கொண்டு இருந்தேன். இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.

ஒரு கவிதையை உங்கள் அளவுக்கு கூர்மையாக பார்க்கும் திறமை எனக்கு வர்வே மாட்டிங்குது ஜேபி.

நீங்கள் கடவுளை பிராத்தித்துக் கொண்டு இருந்த தருணத்தை படித்த போதே கண் கலங்குகின்றது. உங்கள் வால்பாறை இரவு அனுபம் பற்றி படித்தபோதும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஜேபி. நீங்கள் வாழ்க்கயை இவ்வளவு லாவகமாக அனுகுவதை நினைத்து பல முறை பிரம்மிப்பை அடைந்ததுண்டு. ஆனால் வெளிக்காட்டிக்கொள்வதில்லை. இது போன்ற அனுபவங்களே உங்களுக்கு இந்த கலையை வழங்கி இருக்கக்கூடும்.

நன்றி ஜேபி.

"உழவன்" "Uzhavan" said...

அருமை

நளினி சங்கர் said...

இப்ப புரியுது கார்த்தி. மீண்டும் தங்கள் வருகைக்கு நன்றி

சண்முக பாரதி said...

நல்லாருக்குங்க சங்கர்......
உங்கள் படைப்பிலுள்ள பத்திகளின் அந்தங்களில் ஒரு கோர்வையை காண்கிறேன்.......

முகங்களில் வெடிக்கும்
பெருமூச்சுகளில் தெறிக்கும்
படபடப்புகளில் பரவும்
வலியை உணராத
மருத்துவமனைகள் இரக்கமற்றவைகளே......

பட்டு நொடிவது ஒரு ரகம்
பார்த்து துடிப்பது தனி ரகம்
துடிப்பை எழுத்தில் வடிப்பது ஒரு வரம் - ஆகும்
படிப்போர் படிக்கையிலே
துளி நீரேனும் கண்ணில் ஊருமேயானால்.....

வளருங்கள், வளர்த்துங்கள்
எண்ணத்தையும், எழுத்தையும்
எவற்றையும் தாண்டி எப்போதுமே......

Unknown said...

வரிகளையும் அது தாங்கி நிற்கின்ற வலியையும்
ஒற்றை சொல்லில் நல்ல இருக்கிறது என்று
சொல்லிவிட்டு செல்லும்
ஒற்றை சொல்லிலா
நாம் இணைகிறோம்......

வரிகளுக்கான தேடுதலுக்கும் அறிந்த பொருளுக்குமாய்
நின்று விடாமல் ....
நமக்கான வலியாய் அதனை போக்கும் மருந்தென்னும்
நேர்கோட்டில் நாம் இணைகிறோம் ..........

தோழமையுடன் ...
பூர்வ பெளத்தன்

நளினி சங்கர் said...

ஷண்முக பாரதி உங்க comment -யே ஒரு அருமையான கவிதை. இன்னும் நிறைய எழுதவேண்டும் என்கிற உந்துதலை ஏற்படுத்தி இருக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் கட்டுரை, கவிதை எல்லாம் ஒரு கணத்தில் என் ஞாபகத்தில் வந்து போகின்றது. குறிப்பாக என் நெஞ்சை கணக்கச்செய்த அந்த விவசாயம் பற்றிய கட்டுரை. மீண்டும் எழுதுங்கள் பாரதி. உங்களிடிமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.

நளினி சங்கர் said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி பூர்வ பெளத்தன்.

// வரிகளுக்கான தேடுதலுக்கும் அறிந்த பொருளுக்குமாய்
நின்று விடாமல் ....
நமக்கான வலியாய் அதனை போக்கும் மருந்தென்னும்
நேர்கோட்டில் நாம் இணைகிறோம் ..........//

ரொம்ப கவித்துவமா இருக்கு.

Jayaprakashvel said...

சங்கர்
ஒரு முறை நிங்க சொல்லி இருக்கிங்க. அதிகம் கவிதைகள் படிச்சதிலைன்னு. அது உண்மையிலேயே உங்களை பொறுத்த வரை ரொம்ப நல்லது. நெய்தலில் சொன்னது மாதிரி கன்னி முயற்சிகளில் இயல்பாய் ஒரு புதுத்தன்மை வெளிப்படும். உங்கள் கவிதை மொழி மிகவும் அலாதியானது. வித்யாசமானது. நிங்கள் படிக்க ஆரம்பித்தால் படிப்பதன் தாக்கம் உங்கள் வரிகளை எழுத்தை மாற்ற சொல்லும். அது உங்கள் தனித்தன்மையை பாதிக்கலாம் எனவே எழுதுங்கள். அது கவிதையா நல்ல வரியா என்பது பற்றி நிங்கள் கவலைப்படா வேண்டாம். அது என்னை போன்று படிப்பவர்களின் வேலை. முருகேஷ் மாமா சொல்வது போல என்ன தோணுதோ எப்படி தோணுதோ அப்படியே எழுதுங்க. ஏனென்றால் உங்க கவிதை மொழி இயல்பாவே நல்ல இருக்கு.

Jayaprakashvel said...

முறிந்த குடை

உனது இரு முயற்சிகளையும் மீறி-
குடையை முறித்து...
சாரல் தெளித்து...
உன்னின் பதினோறு முக பாவங்களை
எனக்குக் காட்டிய
கோடைக்கால மழைக்காற்றுக்கு
இந்தக் கவிதையை
பரிசாகக் கொடுத்து விட்டு வந்தேன்.


This is one example. Doesnt it resembles your pizaiyillaatha kavithai tharukien?

நளினி சங்கர் said...

ஜெபி
உங்கள் 'முறிந்த குடை' மிகவும் அருமையான கவிதை.
பார்க்கும் எல்லாவற்றிலிருந்தும் ஒரு கவிதையை ஆக்கும் திறமை உங்களிடம் இருப்பதை எனக்கு ஊர்ஜிப்படுத்திய நிறைய கவிதைகள் உள்ளன.
'வெயிலைத்தாண்டுகிற சிறுமி'

'சவுரீஷின் முகத்தில் புன்னகை'

'தூக்கம் கலையாத பயணி' போன்றவைகளைச் சொல்லலாம்.

இதில் முறிந்த குடையை படிக்கும்போது குதூகலமான உணர்வை ஏற்படுத்துகின்றது.

நானும்தான் பல முறைகள் மழையில் நடந்து போயிருக்கன். குடையுடன் என்னையும் பல
அவள்கள் கடந்து போயிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும் என்னால் இன்னும் என் கவிதைக்குள் அழைத்துவர இயலவில்லை. இதுதான் உங்களுடைய எல்லா கவிதைகளின் சிறப்பும்.

உங்கள் ஜுனியர் கண்ணியப்பனிடம் கேட்டுப்பாருங்கள்

S. Philip Raja said...

திரு.ஷங்கர் அவர்களின் இந்த கவிதை மனித குலத்தின் அன்றாட வாழில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட மருத்துவமனைகள் பற்றிய மிக யதார்த்த அதே நேரம் பொருள் ஆழம் பொதிந்த ஓர் பதிவாக எனக்குப்படுகிறது. "வலிகளைப் பொறுக்கமுடியாத முனகல்கள், முனகல்களைப் பொறுக்கமுடியாத வலிகள்" ... என்ற இந்த வரிகள் நெஞ்சை கனகனக்க வைக்கிறது. இந்த வரிகள் சொல்லும் பொருள், என்னை பொறுத்த வரை மனித வாழில் அன்பின் வலிமையை, பகிர்வை சொல்வதாய் இருக்கிறது. நாம் அன்பு வைக்கும் இதயங்கள், வழியில் துடிக்கும் தருணம் அதே வலியை நாமும் அனுபவிக்கும் அந்த உன்னத உணர்வை வெளிபடுத்தும் விதமாய் அமைந்ததுள்ளது. இந்த வரிகள் பலரின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை.

உயிரற்ற மருத்துவமனைகள் ஒரு புறம் இருக்க, உயர்திணையாய் இருந்தும் மனிதம் மறந்த அங்கே பணியில் இருக்கும் ஒரு சிலரின் இரக்கமற்ற செயல்களை இன்னும் வலிமையாய், கண்டன போக்குடன் பதிவு செய்தலும் சிறப்பாய் அமையும் என்பது அடியேனின் எண்ணம்.

வாழ்த்துக்கள்...

SPR

நளினி சங்கர் said...

நன்றி பிலிப் தம்பி(SPR)

இந்த கவிதை முயற்சி யாருக்கும் கண்டனம் தெரிவிக்கும் நோக்கோடு எழுதப்படவில்லை. மருத்துவமனைகள் பற்றிய என்னுடைய அவதானிப்பு மட்டுமே.

////////////
"வலிகளைப் பொறுக்கமுடியாத முனகல்கள், முனகல்களைப் பொறுக்கமுடியாத வலிகள்" ... என்ற இந்த வரிகள் நெஞ்சை கனகனக்க வைக்கிறது. இந்த வரிகள் சொல்லும் பொருள், என்னை பொறுத்த வரை மனித வாழில் அன்பின் வலிமையை, பகிர்வை சொல்வதாய் இருக்கிறது. நாம் அன்பு வைக்கும் இதயங்கள், வழியில் துடிக்கும் தருணம் அதே வலியை நாமும் அனுபவிக்கும் அந்த உன்னத உணர்வை வெளிபடுத்தும் விதமாய் அமைந்ததுள்ளது.
////////////

உண்மைதான் பிலிப்.
வலி இருக்கும்போது தோன்றிய வரிகள் பிலிப். யூகித்து இருப்ப-னு நினைக்கிறன்.

Magesh said...

உங்கள் கவிதை என்னை ஒரு முறை மருத்துவமனைக்குள் அழைத்துச்சென்று வந்தது போல் இருந்தது. இன்னும் எங்கெங்கெல்லாம் எங்களை அழைத்துச் செல்லுமோ என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது. நிறைய எழுத வாழ்த்துக்கள்

நளினி சங்கர் said...

மகேஷ் தம்பி...

பின்னூட்டம் எல்லாம் பயங்கரமா இருக்கு.

//உங்கள் கவிதை என்னை ஒரு முறை மருத்துவமனைக்குள் அழைத்துச்சென்று வந்தது போல் இருந்தது. இன்னும் எங்கெங்கெல்லாம் எங்களை அழைத்துச் செல்லுமோ என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.//

நீங்கள் சொல்லியிருப்பது சற்று அதிகப்படியாக இருந்தாலும், படிப்பவர்களிடம் இத்தகைய ஒரு உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த கவிதை முயற்சியின் நோக்கம். அது நிறைவடைந்திருந்தால் மகிழ்ச்சி.

விநாயக முருகன் said...

மருத்துவமனைகள் இரக்கமற்றவை.

ஆழமான வரிகள். இந்த வரிகளின் பாதிப்பில் எனக்கும் சில கவிதை வரிகள் மனதில் ஓடுகின்றன.

பா.ராஜாராம் said...

அருமைங்க.

அறிமுகத்திற்கு நன்றி! எல்லாம் வாசித்தேன். அருமையான வலைத் தளம். வருவேன்.

நளினி சங்கர் said...

நன்றி என்.விநாயகமுருகன்

////இந்த வரிகளின் பாதிப்பில் எனக்கும் சில கவிதை வரிகள் மனதில் ஓடுகின்றன.////

மனதில் ஓடிக்கொண்டிருக்கும் வரிகளை படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

நளினி சங்கர் said...

நன்றி பா.ரா

உங்கள் பாராட்டுக்களுக்கும்
'வலைத் தளத்திற்கு வருவேன்' என உறுதிகூறியிருப்பதற்கும் நன்றி

பாற்கடல் சக்தி said...

ஓ... உங்களை பின் தொடர வேண்டும் போல் இருக்கிறதே. வார்த்தை சேகரங்கள் நிறைய உங்களிடம் இருக்கக் கூடும். வாழ்த்துகள் சகா

மதுரை சரவணன் said...

அருமை . மருத்துவமனை கண் முன் நிறுத்தியதற்கு வாழ்த்துக்கள்

அமைதி அப்பா said...

மருத்துவமனையை அழகாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.
நன்றி.

நளினி சங்கர் said...

வருகைக்கு நன்றி பாற்கடல் சக்தி
//ஓ... உங்களை பின் தொடர வேண்டும் போல் இருக்கிறதே. வார்த்தை சேகரங்கள் நிறைய உங்களிடம் இருக்கக் கூடும்//

உங்களின் இந்த பின்னூட்டதிற்கு இதே பதிவின் பின்னூட்டங்களிலேயே என் இலக்கிய அறிவைப்பற்றி நன்கு அறிந்த என் இனிய நண்பர் ஜேபி பதில் சொல்லியிருக்கிறார். நான் கவிதைகள் அதிகம் வாசித்தவன் அல்ல.

உங்களின் "வா... வந்து தொலையுங்கள்" படித்ததும் நீண்டநேரம் யோசித்தபடி இருந்தேன். உள் மனத்திலுருந்து வரும் வார்த்தைகளே இவ்வளவு வீரியத்துடன் வெளிப்படும். தங்கள் உணர்வுக்கு தலை வணங்குகின்றேன்.

நளினி சங்கர் said...

நன்றி மதுரை சரவணன்

நன்றி அமைதி அப்பா

sabarinathan subbaramanian said...

ஒரு அர்பணிப்பு உணர்வுடைய மருத்துவர் இக்கவிதைக்கு
பதில் எழுதினால் எப்படி இருக்கும்…

உடம்பிற்குள் விருப்பமில்லாது உருவாகிவிட்ட
தவறுகளை சரிசெய்யவோ,
கசடுகளை அகற்றவோ
தவிற்க முடியாது கிழிப்பதுண்டு உங்கள் தசைகளை
உடைப்பதுண்டு எழும்புகளை, துளையிடுவதுண்டு தோல்களில்
ஒருபோதும் விருப்பமில்லையெனக்கு
உங்கள்மேல் ஆயுதம் பிரயோகிக்க…

விபத்துக்கள், சுகவீனங்கள்
நேரம் பார்த்து வருவதில்லை…
ஒருபோதும்
நேரம் பார்த்து செல்வதில்லை
நேரத்திற்கு வந்துவிடும் நாங்கள்…

மகனின் உயிரைக் காப்பாற்றியதாய் கண்ணீருடன் கும்பிடும்
வயோதிக தாயின் நன்றி…
காசையெல்லாம் பிடுங்கீட்டு கொன்னுட்டாங்கடா என்ற
மருத்துவ வளாக ஒப்பாரி..
இரண்டையும் இதயத்திற்கு எடுத்துச்செல்வதில்லை…
நாங்கள் உடம்பிற்கு மட்டுமே வைத்தியம் செய்கிறோம்
உயிரருக்கல்ல…


எப்போதாவது உங்களிடம் வந்துபோகும் கிருமிகளிடம்
தினம்தோரும் லாவகமாய் பழகிக்கொன்டிருக்கிறோம்…

எங்கள் சலனங்களை வெளிப்படுத்துவதில்லை
உங்களை சலனப்படுத்தக்கூடாதென்பதற்க்காக…

உங்கள் புன்னகையை மீட்டெடுப்பதும்
உங்கள் வலிகளை ஆற்றுவதுமே எங்கள் பணி…

வலியில்லாமல்
வடுவில்லாமல்
பிணவரையில்லாத
முற்றிலும் குணமாக்கும்
மருத்துவமனைதான்
எங்கள் வாழ்நாள் தேடல்…
அதுவரை மன்னியுங்கள்
எல்லா அசொகரியங்களுக்கும்…

நளினி சங்கர் said...

சபரி,
நீங்க சொல்றதெல்லாம் புரியுது. ஆமா இதெல்லம் ஏன் எங்கிட்ட சொல்றீங்க. (நன்றி; 'தமிழ்ப்படம்' வசனகர்த்தா-வுக்கு)

ஒரு நல்ல கவிதை பின்னூட்டமாக பயன்படுத்தப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கின்றது.

பாற்கடல் சக்தி said...

நன்றி நண்பரே... பொள்ளாச்சி மண்ணுக்கு உரியவன் நான்.
30 மாதங்களாக திருப்பூர் வாசி. இங்கு வந்த பின்பே வலைத்தளம் அறிமுகம் என்பதால், அப்படி பதிவு செய்தேன்.

நளினி சங்கர் said...

உங்கல் கவிதையில் வெளிப்பட்டிருந்த கோபமும் ஆதங்கமும் ஈழ சகோதரனின் குரலுக்கு நிகரான ஒன்றாக இருக்கின்றது என்பதைக் குறிப்பிடவே 'உண்மைய சொல்லுங்க. நீங்க திருப்பூர் தானா நண்பா' என பின்னூட்டமிட்டேன்.

உங்கள் கவிதைக்கான பாராட்டுதலே நண்பா.

இருப்பினும் உங்கள் அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

விஜய் said...

முதல் முறையாக வந்தேன்

அற்புதமான வரிகள்

வாழ்த்துக்கள்

விஜய்

நளினி சங்கர் said...

நன்றி விஜய்...

அண்மைய இடுகைகள்