Wednesday, June 16, 2010

அவன் இவன்

அவன் அவனுக்குள்ளாகவே
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தான்
இனி,
  • பேருந்து நெரிசல்களில்
    எந்தப் பெண்ணின் புட்டத்திலும்
    தன் குறியை வைத்து அழுத்துவதில்லை

  • எதிர்வீட்டு ஹேமலதா
    தெரு பெருக்கும்போது
    குலுங்கும் அவளின் முலைகளை
    ஒளிந்திருந்து ரசிப்பதில்லை
  • பார்க்கும் எல்லா பெண்களிடமும்
    ஏதோ ஒரு நடிகையின் முகசாயலை
    தேடப்போவதில்லை
என நீண்டு கொண்டே சென்ற ஒரு பட்டியலை
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தவன்
பேருந்திலிருந்து இறங்கி நடக்கத்துவங்கினான்.
இவனும் அவனைப் பின்தொடர்ந்தான்.

இருவரும்
ஒரு மாபெரும் கூட்டத்தினுள் நுழைந்தார்கள்.
ஒரே மாதிரியான முகத்தோற்றத்துடன்
இருந்த அந்த ஆண்களின் கூட்டத்தில்
நான், அவன், இவன் அனைவரும்
அடையாளமற்று போனோம்.

சிறிது நேரத்திற்கு முன்பு
அவனுக்கு தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது.
அவனுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கின்றதாம்.

8 comments:

மதுரை சரவணன் said...

நான் அவன் இல்லை. வாழ்த்துக்கள்

கம்ப்யூட்டர் மெக்கானிக்... said...

நெத்தி அடி!... வெற என்ன சொல்ல???!..

Jayaprakashvel said...

ரொம்ப நல்லா இருக்கு சங்கர்.

ஒரே மாதிரியான முகத்தோற்றத்துடன்
இருந்த அந்த ஆண்களின் கூட்டத்தில்
நான், அவன், இவன் அனைவரும்
அடையாளமற்று போனோம்.

மிகவும் எதார்த்தமான வரிகள்

நளினி சங்கர் said...

நன்றி
மதுரை சரவணன்

நன்றி கம்ப்யூட்டர் மெக்கானிக்

Unknown said...

மிக அருமை. பெண் குழந்தை பிறந்ததால் திருந்தீட்டீங்க. ஆனா ஆண் குழந்தை பிறந்தால் அப்படியே தான் இருப்பீங்க்ளா (சும்மா தான் கேட்டேன்.....)

நளினி சங்கர் said...

வருகைக்கு நன்றி பிரபு...

எந்த குழந்தை பிறந்தாலும் யாருமே திருந்தப் போவதில்லை. அந்த ஒரு கணம் அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது...

அவ்வளவே...

Jayaprakashvel said...

Shankar once i shared some thoughts on using photos for kavithaikal or other works. As u might have thought, ur kavithaikal with photos are having a very good look. Of course kavithai doesnt need any alangkaaram. but still it holds much attraction. I happen to know that there are some sites which will give copyright-free artphotos. see that and consider this issue. With photo it looks good. ur previous one. But, I still remain in the same side. I will avoid using others photos.

Unknown said...

சரிங்க சங்கர் சார். அடுத்த கவிதை எப்போது?

அண்மைய இடுகைகள்