Wednesday, February 9, 2011

இந்தியாவுக்கு பவுடர் போடும் புத்திசாலிகள்

சமீபத்தில் விஜய் டிவி புகழ் கோபிநாத்தின் உரை அடங்கிய வீடியோ ஒன்றை என் நண்பர்கள் facebook-யில் சிபாரிசு செய்திருந்தனர். மிகவும் அபத்தமான கருத்தை சொல்லும் வீடியோ. பார்க்கும்போதே வேதனையாக இருந்தது. கோபிநாத் உரையின் சாராம்சம் இதுதான். இந்தியா மிகச்சிறந்த நாடு. அதை நாம் சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது. உலகத்திலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் இந்தியா அதன் குடிமக்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது. இங்குதான் கல்வி இலவசம், மருத்துவம் இலவசம். விவசாயத்திற்கு மின்சாரம் இலவசம். இப்படி நீண்டு கொண்டே செல்கிறது பட்டியல்.

 அடுத்து அவரின் ஆஸ்திரேலியா பயன அனுபவம் பற்றி ஒரு குறிப்பு சொல்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள டார்லிங் ஹார்பர் என்கிற இடத்துக்கு அவர் சென்றிருந்தாராம். அங்கு கோபிநாத்தை பார்ப்பதற்காக அங்குள்ள தமிழர்களெல்லாம் வந்திருந்தார்களாம். அவரை காரில் ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றி காட்டுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த கோபிநாத்துக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் train-ல் வந்திருந்தார்களாம். அங்கு கார் பார்க்கிங் செய்வதற்கு 1 மணி நேரத்திற்கு 40 டாலர் ஆகும் என காரணம் சொல்லியிருக்கிறார்கள். இங்குதான் நம்ம கோபிநாத்-க்கு ஞானம் பிறந்ததாம். ‘’இங்கு இருக்கும் ஸ்பென்சர் பிளாஸாவில் கார் பார்க்கிங் செய்ய 10 ரூபாய்தான் கட்டணம். ஆனால் அங்க 40 டாலர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு மக்களின் நலன்தான் முக்கியம்.’’ என்பதை இந்த எளிமையான உதாரணத்தை கொண்டு விளக்குகிறார்.

கோபிநாத்தை பொறுத்தவரை நம்மக்களின் அடிப்படையான பிரச்சனை கார் பார்க்கிங் செய்வதுதான். இந்திய ஜனநாயகம், கார் வைத்திருக்கும் ஏழைக்குளுக்கான நாடு, அவர்களை எப்போதும் கைவிடுவதில்லை என்பதுதான் கோபிநாத்தின் கண்டுபிடிப்புபோல!.

ஆஸ்திரேலியா அரசாங்கம் 40$ கட்டணம் விதித்திருப்பதற்கு அடிப்படையான காரணம் அங்கு மக்களுக்கான உண்மையான ஜனநாயகம் நடைபெற்றுக்கொண்டிருப்பதுதான். அரசாங்கம் இவ்வாறு கடுமையான கட்டணங்களை விதிப்பதால் உண்மையிலேயே காரில் வரவேண்டிய அவசியம் இருந்தால் மட்டுமே அங்குள்ள மக்கள் காரை பயன்படுத்துகிறார்கள். சுற்றுப்புறசூழல், சாலைகளில் வாகன நெருக்கடி போன்றவற்றை கருத்தில் கொண்டு அரசாங்கம் பின்பற்றிவரும் நடைமுறைகள். மேலும் அங்கு நடுத்தரவர்கத்திற்கு கீழ் உள்ளவர்கள் கூட கார் வைத்திருப்பவர்கள் (நம்ம ஊர்ல நம்ம ஆளுங்க சைக்கிள் வச்சிருக்க மாதிரி). அத்தனை பேரும் காரில் வந்தால் ஆஸ்திரேலியா சிக்னலும் நம்ம ஊர் சிக்னல் மாதிரிதான் ஆகும்.

நம் சென்னையில் தினசரி மாநகரபேருந்துகளில் பயனம் செய்திருப்பவர்களுக்கு தெரியும். சிக்னலில் நாம் அமர்ந்திருக்கும் பேருந்தை முந்திக்கொண்டு ஒவ்வொரு காராக வந்து நிற்கும். ஒவ்வொருகாரிலும் ஒரு ஆள்தான் உட்காந்திருப்பார்கள். சிக்னல் count down முடிவதற்குள் அனைத்து காரும் சிக்னலை கடந்துவிடும். சுமார் 70 பேருக்குமேல் பயனம் செய்யும் பேருந்து பத்தடிதான் நகர்ந்திருக்கும். இதுபோன்ற ஜனநாயகம் எல்லாம் ஆஸ்திரேலியாவில் சத்தியமாக எதிர்பார்க்கமுடியாதுதான்.

இங்கு கல்வி இலவசம்தான், ஆனால் பல பள்ளிக்கூடங்கள் ஆசிரியர்களே இல்லாமல் நடந்துகொண்டிருப்பதும் இந்த நாட்டில்தான். எந்த வசதிகளும் இல்லாமல் இலவச கல்வியில் பயிலும் மாணவர்களுக்கும் ஏகப்பட்ட பயிற்சிகளுடன் தயாரிக்கப்படும் மாணவர்களுக்கும் போட்டிவைத்து வெறுப்பேற்றுவதும் இந்த நாட்டில்தான்.

நம் நாட்டில் மட்டும்தான் மின்சாரம் இலவசம். ஆனால் உலகத்திலேயே விவசாயிகளை பட்டினிபோட்டு சாவடிக்கும் பெருமையும் நம் நாட்டுக்கு மட்டுமே உண்டு.

இங்கு மருத்துவ வசதி இலவசம் தான். ஆனால் அந்த இலவச மருத்துவமனைகளின் நிலைமை என்ன என்பது சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லாத ஒன்று. சமீபத்தில் எனக்கு நேர்ந்த மிகவும் ஒரு சம்பவத்தை எந்த தற்குறிப்பேற்றலும் இல்லாமல் இங்கு பகிர்கிறேன். (நம் மருத்துவமனைகள் பற்றி புதிதாக ஒன்றும் இந்த சம்பவம் சொல்லப்போவதில்லை)

நேற்று என் உறவினர் ஒருவரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய சென்னை சென்ட்ரலில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். எலிக்காய்ச்சலை உறுதி செய்யும் பரிசோதனை என்பதால் அது நுண்உயிரியல் ஆராய்ச்சி கூடத்தில் செய்யப்படவேண்டியது. இரத்தமாதிரிகளை 12.00 மணிக்குள் சமர்ப்பித்தாக வேண்டும் என்பதால் அதற்கான பரிந்துரை கடித்துடன் நான் 10.30-க்கே மருத்துவமனைக்கு சென்றுவிட்டேன். இவ்வளவு பெரிய மருத்துமனை வளாகத்தில் நுண்ணுயிரியல் ஆயவகத்தை கண்டறிவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அந்த வளாகத்தின் உள்நுழைந்ததும் உள்ள முதல் கட்டிடத்தினுள் சென்று, ENQUIRY COUNTER-ல் விசாரிக்கலாம் என சென்றேன். நேரம் 10.40 க்கு அந்த COUNTER-ல் போடப்பட்டிருந்த 5 அல்லது 6 இருக்கைகளும் காலியாக இருக்க ஒரே ஒரு அம்மா பெருக்கிக்கொண்டிருந்தார்கள். (அப்பதான் கடைய திறக்கராங்க-னு நினைக்கறன்). கொஞ்சநேரம் காத்திருந்த போது, ஒருத்தர் வந்தார்.


‘’சார் இங்க பிலட், யூரின் டெஸ்ட்லாம் எடுக்குற மைக்ரோ பயலாஜி லேப் எங்க இருக்கு’’


‘’நெகஸ்ட் பில்டிங்’’


அடுத்த கட்டிடத்திற்கு சென்று, அங்கயும் என்கொயரியில் யாரும் இல்லாமல் போக, காத்திருந்து, பிறகு அந்த ஆய்வகத்தை கண்டறிந்து மாதிரிகளை கொண்டு சென்று கொடுத்தால்,


‘எந்த ஹாஸ்பிடல்-ல இருந்து வறீங்க.’


‘மலர் ஹாஸ்பிடல்’


‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என உள்ளே சென்ற 23 வயது மதிக்கத்தக்க செவிலியர் (நர்ஸ்) திரும்பவும் வந்து


‘ஆபிஸ் ல போயி 275 ரூபாய் பணம் கட்டிட்டு வாங்க’


‘ஆபிஸ்-னா எந்த ஆபிஸ்-ங்க?, எங்க இருக்கு?’ என்றேன்.


‘வெளிய’


வெளியனா?


‘கேட்-ல இருக்க செக்யூட்ட கேளுங்க சொல்ல்லுவார்’ என்று கூறிவிட்டு என் பதிலை கூட எதிர்பாரமல் உள்ளே சென்றுவிட்டார்.


நான் செக்யூரிட்யிடம் சென்று ‘ஆபிஸ் எங்க இருக்கு என்றேன்?’


அவர் என்னை மேலும், கீழும் பார்த்துவிட்டு ‘’ஆபிஸ்-னா எந்த ஆபிஸ்’’ என்றார்.


‘’உங்கள கேட்டா தெரியும்-னு சொன்னாங்க. பிலட் டெஸ்ட்-க்கு பணம் கட்ற ஆபிஸ்’’ என்றேன்.


ஓ... அதுவா என சொல்லிவிட்டு... ‘’ நேரா போ... அங்க ஒரு கேட் வரும் அதுல ரைட்-ல போயி முதல் மாடிக்கு போயி கேளு சொல்வாங்க’’ என்றார்.


நேராக சென்றால் அங்க ஒரு கேட்டும் இல்ல... அப்புறம் திரும்பவும் அதெ செக்யூரிட்டியிடம் வந்து ‘’அங்க கேட் ஏதும் இல்லிங்களே’’ என்றேன். ‘’இன்னும் உள்ள போயி ரைட்-ல பாருபா ஒரு பெரிய கேட் வரும்’’ என்றார்.


அந்த கேட்டை கண்டறிந்து முதல் மாடிக்கு சென்றால்.


‘’அடுத்த ஜன்னல்-ல போயி பாரு’’ ‘’அது போல கவுண்டர் ஏதும் இங்க இல்லையே’’ என அலைக்கழிப்பு தொடர்ந்தது.


அங்கு நின்று கொண்டிருந்த ஒரு மாணவியிடம் சென்று ‘’ Leptospirosis Test எடுக்கனும்... அதுக்கு இங்கதான் பணம் கட்டனும்-னு சொன்னாங்க. அந்த கவுண்ட்டர் எங்க இருக்கு?” எனக் கேட்டதில் ‘’ போஸ்ட ஆபிஸ் பக்கத்தில ஒரு ஆபிஸ் இருக்கு அங்கதான் இருக்கும் ” என்றார்.


அவர் குறிப்பிட்ட அந்த கவுன்டருக்கு சென்றால் அந்த கவுண்டரில் வேலை பார்க்கும் அதிகாரியின் இருக்கை காலி. 20 நிமிடம் காத்திருத்தலுக்கு பிறகு அந்த அதிகாரி வந்தார். நேரம் 11.40.


நான் என்னிடம் இருந்த பரிந்துரைக்கடிதத்தை அவரிடம் நீட்டினேன்.


‘’275 ரூபாய் சில்றயா இருக்கா?”


“275 ரூபாயெல்லாம் எப்படா சில்ற ஆச்சு- என மனதில் நினைத்துக்கொண்டு, ‘’சார் 500 ரூபாயாதான் இருக்கு.’’ என்றேன். ‘’காலைலயே சில்ற இல்லாம வந்தா எப்டி. நீங்கதான் முதல்ல பணம் கட்றிங்க நான் சில்றைக்கு எங்க போவன். போயி மாத்திட்டு வந்துடு’’ என்றார். (அரசு அதிகாரிகளில் பல பேருக்கு 11.40 காலை தான்.)


‘’சார் 12.00 மணிக்குள்ள பிலட் சாம்பிள்ள குடுக்கனும்-னு சொன்னாங்க.’’


‘’சரி போயி குடுங்க’’ என்றார்.


‘’Pay பண்ணிட்டு receipt-யோட வந்தாதான் sample வாங்குவோன்-னு சொன்னாங்க அதான்’’


‘’இல்லப்ப சில்றயே இல்ல’’ என்றார்.


‘’சரி சார் மீதி காசு உங்ககிட்டவே இருக்கட்டும் நான் சாம்பிள் குடுத்துட்டு வந்து வாங்க்கிக்றேன்’’ என்றேன்.


அவர் ஒரு நோட்டுப் புத்தகத்தை புரட்டிக்கொண்டே ‘’அப்பகூட என்கிட்ட சில்ற இருக்காது’’ என்று சொல்லிவிட்டு வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.


‘’Sample-ல கொடுத்துட்டு வரும்போது சில்லறை மாத்திட்டு வந்துடறன் சார்’’ என்றேன்.


இந்த யோசனை அவருக்கு சரியாகப்பட்டது. அந்த ஆச்சர்யத்துடன் மீண்டும் ஆயவகத்திற்கு சென்றால், அங்கு என்னை பணம் கட்டிட்டு வர சொன்ன நர்ஸ் இல்ல. அங்கு இருந்த வேற ஓர் நர்ஸ்க்கு (அவுங்க நர்ஸ்ஸா? இல்ல ஸ்கூல் மிஸ்ஸானு தெரியல அவ்ளோ மிரட்டல்) மீண்டும் எல்லாத்தையும் புரியவைத்து sampleல கொடுத்துவிட்டு வெளியே வரும்போது மணி 12.20.


500 ரூபாய்க்கு சில்லறை வாங்க பல இடங்களில் அலைந்து. எவனும் கொடுக்காமல் போக, இறுதியில் ரயில் நிலையித்தினுள் இருக்கும் ஹோட்டல் சரவணபவனுக்கு சென்று ஒரு காபி (19 ரூபாய்) வாங்கி குடித்துவிட்டு. சில்லறையுடன் அந்த ஆபிஸரை அனுகினால்,


அவர் ‘’கொஞ்சம் வெயிட் பண்ணுங்க டீ சாப்டுட்டு வந்துட்றன்‘’ எனக்கூலாக சொல்லிவிட்டு சென்றார்.


காத்துக்கொண்டிருந்த 25 நிமிடத்தில் பல யோசனைகள். ஏதோ கொஞ்ச நஞ்சம் படித்திருக்கும் என்னையே இந்த மருத்துவமனை இவ்வளவு அலைக்கழிக்கும்போது, படிக்காதவர்கள், பாமரர்களின் நிலைமையை யோசித்து பார்த்தால் பரிதாபமாக உள்ளது.


25 நிமிடம் கழித்து வந்த அவரிடம் என்னை வெறும் சில்லறையை எடுத்து குடுப்பதற்காக 25 நிமிடம் வரை காக்க வைத்ததற்கான பரிதாபமோ, குற்ற உணர்வோ எதுவும் காணமுடியவில்லை.


இதுதான் இன்றைய மருத்துவமனையின் நிலை.


கோபிநாத் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ஆனால் இந்த வீடியோ சொல்லவரும் கருத்து நிச்சயம் அபத்தமான ஒன்று. இந்தியாவில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருப்பதைப்பொல் ஒரு தோற்றத்தை உருவாக்குவது ஆபத்தானது. இங்கு எதுவுமே சரியாக நடப்பதில்லை. அதுதான் உண்மை. அதை பேசுவதற்கே ஆட்கள் இல்லாத தருணத்தில் இது போன்று அறிவாளித்தனமாக, இந்தியாவை ஒரு perfect country-யாக உருவகப்படுத்தி, பவுடர் பூசுவது எரிச்சலை ஏற்படுத்துகின்றது.


இந்தியாவில் இரண்டுவகையான நிலப்பரப்புகள் இருக்கிறது. பணம் படைத்தவர்களுக்கு இந்தியா ஒரு ஐரோப்பா. பரதேசிகளுக்கு இந்தியா ஒரு ஆப்ரிக்கா. இதை சொல்வதற்கு நமக்கு எந்த அசிங்கமும் இல்லை. ஏனெனில் நமக்கு இந்தியா என்கிற வரைபடத்தின்மீது அக்கரை இல்லை. அதில் வாழும் மக்களின் மீதுதான். அவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலை ஒரு அங்குலமாவது உயராதா என்பதுதான்.

27 comments:

bandhu said...

நீங்கள் சொல்வது ஒவ்வொரு சொல்லும் உண்மை! The first step to correcting ourselves is to accept what is wrong with us! இல்லையேல், இப்படியொரு டினயலுடனேயே காலம் கடத்துவோம்!

Thekkikattan|தெகா said...

உண்மையை உண்மையாக பேசுகிறது, பதிவு! இரண்டு இந்தியாவை பற்றிய அவதானிப்பு மிகவும் சிறப்பு. பகிர்விற்கு நன்றி!

baskar said...

இந்தியாவில் அது சரியில்லை இது சரியில்லை மொத்தமாக எதுவுமே சரியில்லை என்று சொன்னால் நமது தேச பக்தர்களுக்கு எரிச்சல் வந்து விடுகிறது. அது இருக்கிறது இது இருக்கிறது உங்களுக்கு தான் தெரியவில்லை என்று கூறி பல பட்டங்களை வழங்கிவிட்டு சென்றுவிடுவார்கள். நாம் சொல்வது உண்மைதானா? என்றால் அதற்க்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பதில்லை ஏனென்றால் அந்த அக்கறை எவருக்கும் இருப்பதில்லை அது தேவை இல்லாத வேலை என்னமோ இவர்கள் செய்வது எல்லாம் சொர்கத்தை படைக்கபோவதை போல.//நமக்கு இந்தியா என்கிற வரைபடத்தின்மீது அக்கரை இல்லை. அதில் வாழும் மக்களின் மீதுதான்// மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய ஒன்று தொடர்ந்து செய்வோம். அதை கேட்ட உடன் எனக்கு ஏற்பட்ட எரிச்சலை வார்த்தைகளை வெளிபடிதியதற்கு நன்றி.

சமுத்ரா said...

அருமையான பதிவு

S. Philip Raja said...

nalla pathivu. vazhthukkal. gopinath avargalin pechchu velipadaiyaaga namm dhesadhin indraiya nilaikku aadharavaaga irundhaalum, avar payanpaduthiya udhaaranangal sariyaanadhaaga illai endraalum, adhan pin avar solla varum vishayam, karuththu, nokkam varaverkka dhakkadhu. naattai eppodhum kurai kooruvadhai vittu vittu naam enna seigirom, evvalavu gnayamaga seigirom endra vaathamaagavum adhai paarkka vendum endru ninaikkiren.

seeprabagaran said...

இந்த நாட்டில் தம்மை அறிவாளிகளாகவும் தேசபக்தர்களாகவும் காட்டிக்கொள்ள பல படித்த முட்டாள்கள் இப்படித்தான் இந்தியாவைப் பற்றி உளறிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவை தேடுவதை விட்டுவிட்டு இந்தியாவில் உள்ள அரசு நிர்வாக நடைமுறைகளில் இந்தியாவைத் தேடினால்தான் இந்தியாவின் உண்மைமுகம் புரியும்.

நளினி சங்கர் said...

@bandhu
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நளினி சங்கர் said...

@ Thekkikattan|தெகா
நன்றி தெகா

நளினி சங்கர் said...

@ பாஸ்கர்,
அமோதிக்கிறேன் பாஸ்கர். வருகைக்கு நன்றி

நளினி சங்கர் said...

@ சமுத்ரா,
நன்றி சமுத்ரா

நளினி சங்கர் said...

@ seeprabagaran

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

நளினி சங்கர் said...

@philip raja
////////////////// gopinath avargalin pechchu velipadaiyaaga namm dhesadhin indraiya nilaikku aadharavaaga irundhaalum, avar payanpaduthiya udhaaranangal sariyaanadhaaga illai endraalum, adhan pin avar solla varum vishayam, karuththu, nokkam varaverkka dhakkadhu. naattai eppodhum kurai kooruvadhai vittu vittu naam enna seigirom, evvalavu gnayamaga seigirom endra vaathamaagavum adhai paarkka vendum endru ninaikkiren.
/////////////////

கோபிநாத் உரையை பற்றி மிகவும் சுருக்கமான கண்டனம்தான் இந்த பதிவு. கோபிநாத் பயன்படுத்திய அத்தனை உதாரணங்களும் உலரல்கள். அதில் நேர்மறையாக எடுத்துக்கொள்வத்ற்கு என்ன இருக்கின்றது என்பது நிச்சயமாக எனக்கு புரியவில்லை பிலிப்.

இந்தியாவை பற்றியும் அதன் மக்களின் வாழ்க்கையை பற்றியும் உண்மையான புரிதல் அவசியம். அந்த புரிதல் கொண்ட எத்தனையோ சிந்தனைவாதிகள் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களை விடுத்து இதுபோன்ற டுபாக்கூர்களை தூக்கிநிறுத்தவேண்டாம் என்பதுதான் நம் வேண்டுகோள்.

மேலும்,கோபிநாத்துக்கு இந்தியாவில் உள்ள ஐரோப்பிய நிலப்பரப்பை பற்றிதான் கவலை. அவர் பேசியதெல்லாம் அங்கு வசிப்பவர்களுக்காக மட்டுமே. இந்தியாவைப் பற்றி இவ்வளவு ஆழமாக பேசியவர், நம் சமகால பிரச்சனைகள் குறித்து இதுவரை ஏதேனும் கருத்து தெரிவித்திருக்கிறாரா?,

இவர் போல பேசிக்கொண்டிருந்தால்...
வீட்டில் அரிசி, பருப்புக்கே வழியில்லாமல் இருப்பவனிடம் சென்று கலர்டிவியை கொடுத்து காமெடி பண்றவனுங்க தொடர்ச்சியா பன்னிக்கிட்டேதான் இருப்பானுங்க.

Unknown said...

எனக்குத் தெரிந்து HongKong போன்ற இடங்களில் கூட நான்கு சக்கர வாகனங்களுக்கு Parking Fee ரொம்ப அதிகம்.

உலகத்துல இருக்கறவன் மைக்கேல் ஜாக்சனை பிரபலமான Pop பாடகராகப் பார்த்தால், இந்தியாவில் அவரை பிரபலமான நடனக்காரனாக பார்ப்பார்கள்.

:-)))

Jayaprakashvel said...

சங்கர்
உங்களின் எழுத்தை வரவேற்கிறேன். நிறையப் பேர் இப்படி இந்தியா நல்லா இருக்கு என்று சொல்லி வருகிறார்கள். அவர்களெல்லாம் கூலி பெற்ற உளவாளிகள் அல்லது மயக்கத்தில் இருக்கும் குடிகாரர்கள் என்பது என் எண்ணம். முதலாவதைப் பற்றி கவிஞர் முருகேசன் மாமா ஒரு கட்டுரை எழுதி வருகிறார். நிறைய எழுதுங்க. நெய்தல் மறுபடியும் வேறு ஒரு பெடரில் கொண்டு வர பேசிக் கொண்டு இருக்கிறேன். அதிலும் எழுதுங்கள்.

Shanmugavel Chinnathambi said...

சங்கர் அவர்களே !
நமது மொத்த சமூகமும் திருந்துவது இப்போ நடக்க போவது இல்லை! ஒரு சாதி சான்றிதழ் வாங்க நான் பட்ட பாடு போதும்!
உங்கள் அலைச்சலை படிக்கும் போது எனக்கு இந்த நாபகம் வந்தது.
தொலைக்காட்சியில் விளம்பர வருமானத்துக்காக சிலர் செய்யும் நிகழ்சிகள் மிகையனதாகவே இருக்கிறது.
இங்கு(ஜப்பான்) இரண்டு நிமிடம் தொடர்வண்டி தாமதமாக வந்ததற்கு பயணிகள் மிகப்பெரிய பிரச்சினையாக்கி விட்டார்கள்.
ஐநூறு ரூபாய் சில்லறை மாற்ற பத்தொன்பது ரூபாய் செலவு பண்ண வேண்டிய கட்டாயம்! நானும் இது போல நிறைய அனுபவித்திருக்கிறேன்.

பணம் படைத்தவர்களுக்கு இந்தியா ஒரு ஐரோப்பா
பரதேசிகளுக்கு இந்தியா ஒரு ஆப்ரிக்கா

இந்த வரிகள் மிகவும் உண்மையான வரிகள்...

பலர் இரண்டாவது வரிக்கு சொந்தக்காரர்கள்.

நானும் அந்த வரியில் வாழ்ந்திருக்கிறேன்.

இதை எல்லாம் மீறி உங்கள் எழுது ஆர்வத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை! வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும்!

தொடரட்டும் தமிழில் உங்கள் சமூக கோபம்!

Thiru said...

hai Shankar you exploring the basic issues of normal human being, very good explanation for truth. I will support you, Carry on.

இதைபோல எத்தனயோ பிரச்னைகள் இருக்கு, உதரனமாக, ஒரே மாதிரி பிரச்சனைகளால் பதிக்க பட்டவர்கள் கூட ஒன்று சேர மட்டேங்கரங்க. அவன் பதிக்க பட்டா நான் ஏன் வரனும், என்கிற மனபோக்கு மிகுந்து உள்ளது. எங்கயாவது எவனோ ஒருத்தன் போராடிகிட்டு இருப்பான், மத்தவங்க நமக்கும் அதுக்கும் தொடர்பு இல்லை என்று போய்கொண்டே இருக்கின்றனர். இம்மதிர்யான சூழலில் எல்லாவிதமான சமுக விரோதிகளும் விழித்துகொள்கிரார்கள், நாட்டை சுரண்டுகிறார்கள். தனக்கு சொகுசாக வாழ பொருட்கள் இருக்கும் போது, மற்றவர்களை பற்றி கவலைப்படும் நல்ல உள்ளங்கள் மிக குறைவு. உன்னைபோன்றவர்கள் நல்ல சிந்தனை உடன் உண்மையை வெளிக்கொண்டுவர எழுதுவது பாராட்டத்தக்கது. வாழ்க வளமுடன்.

Samy said...

Koduththa kasukku koovura pasanka. Vidunka sir. When I think about what happened to you, Manorama (I think the film is Indian) came to my mind. Samy

செந்திலான் said...
This comment has been removed by the author.
செந்திலான் said...

மிக சரியான எதிர்வினை.

நளினி சங்கர் said...

//////நிறைய எழுதுங்க. நெய்தல் மறுபடியும் வேறு ஒரு பெடரில் கொண்டு வர பேசிக் கொண்டு இருக்கிறேன். அதிலும் எழுதுங்கள்.//////

நிச்சயம் ஜே.பி...

நளினி சங்கர் said...

@ கிருஷண பிரபு
:-)


நன்றி சண்முகவேல் சின்னத்தம்பி...

நன்றி திரு...

நன்றி சாமி...

நன்றி செந்திலான்...

mansoor said...

arumaiyana padaipu, makkal yappa purungukuvanga nama innum munnaralanu

sabarinathan subbaramanian said...

மூன்று விசயங்களை மிகவும் நுட்பமாக சங்கர் பதிவு செய்திருக்கிறார்.
இந்தியா, அரசு அலுவலர்கள், கடைசியாக கோபிநாத்.
இந்தியாவுடைய இயற்கையான பன்முகத் தன்மையை நாம் மிகவும் ரசித்திருக்கிறோம். ஆனால் சுயநலத்தாலும், அதிகாரத்தாலும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செயற்கையான இருவேரு இந்தியாவை நிச்சயம் சகித்துக்கொள்ள முடியாது.
அரசு அலுவலர்களுக்கென்றே ஒரு மனநிலை உருவாகி விட்டது. அது மூன்று தலைமுறைகள் கடந்து விட்டது. மிக சிலரைத்தவிர எல்லோருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி அலட்சியமாகவே நடந்துகொள்வதால் அவர்களைப் பொருத்தவரையில் அதை தவறாகவே உணர்வதில்லை.
கோபிநாத்தை இங்கே சங்கர் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புத்திசாலிகளுக்கான ஒரு உதாரணமாகவும் குறியீடாகவுமே பயன்படுத்தியுள்ளார் என நினைக்கிறேன். பெரும்பாலும் இதைப்போல் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட நிலைக்குமேல் உணமையை பேசுவதைவிட இமேஜுக்காக ஏதாவது உலருவதே வழக்கம். இதையெல்லாம் சீரியசா எடுத்துக்காம சீரியசா எதாவது பண்ணுங்க சங்கர்…

S. Philip Raja said...

@ shankar anna, wht u said is correct. i agreed that the examples he used is not right. but i somehow felt that he wanted to project india in a lighter side rather than talking the badness of it always. what i agree with him is rather than blaming the country always we also need to think what we are doing and whether we are correct in all ways as citizens.

but reading ur reply surely reminded me again i need to learn lot more from people like you to think. it also reminded me i am still a beginner in politics and way of analyzing it.

Unknown said...

காசு இருந்தா ஐரோப்பிய இந்தியா,இல்லை எனில் ஆப்ரிக்க இந்தியா.சரியான கருத்து சார்.

KARTHIIGUNA said...

சார் ரொம்ப ரொம்ப சரியாய் சொன்னிங்க

KARTHIIGUNA said...

சார் ரொம்ப ரொம்ப சரியாய் சொன்னிங்க

அண்மைய இடுகைகள்