Wednesday, May 5, 2010

அவனுடைய 43-வது பிறந்தநாளுக்கு பிறகு

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும்
அவன் அம்மாவின் கடிதங்களின் வருகை
குறைந்து போயிருந்தது.

எப்பொழுதாவது உணவகங்களில் கை கழுவும்போதோ
முடிதிருத்தத்தின்போதோ
பார்க்க நேரும் கண்ணாடிகள் மீது
அவனுக்கு குற்றச்சாட்டுக்கள் உண்டு.
அவைகள் அவனுடைய முகத்திற்கு பதிலாக
வேறு ஏதோ ஒரு முகத்தை காண்பிக்கின்றதாம்.

இப்போதெல்லாம்
எதிர்ப்படும் எந்த மார்பகங்களும்
அவனை கிளர்ச்சியடையச் செய்வதில்லை.
நீண்ட நேரம் அடக்கி வைத்துக்கொண்டிருந்து
சாவுகாசமாக கழிக்கும்
சிறுநீரின் சுகமே
அவனுக்கு போதுமாய் இருக்கின்றது.

-நளினி சங்கர்

நன்றி
பனிமுலை இலக்கிய இதழ்

14 comments:

மணிஜி said...

நல்லாயிருக்கு நண்பரே..பின்னூட்ட தடங்கல்களை அகற்றுங்கள்

Jayaprakashvel said...

முற்றிலும் புதிய தளத்திலான கவிதை. நல்லா இருக்கு. கொஞ்சம் நீளமாகவும் எழுதி இருக்கலாம்.

நளினி சங்கர் said...

நன்றி திரு மணிஜி...

நான் இந்த பதிவை தமிழ் மணத்துக்கு கூட இன்னும் அனுப்பவில்லை. எப்படி இந்த பதிவு உங்களை வந்தடைந்தது. மிக்க நன்றி

பின்னூட்ட தடங்கல்கள் என்று எதைச் சொல்கிறீர் என்பது புரியவில்லை. சற்று விளக்கமாக கூறவும். உங்கள் நேரம் உங்களை அனுமதிக்கும் பட்சத்தில்.

நளினி சங்கர் said...

நீளமாக எழுதும் எண்ணம் இருக்கின்றது ஜேபி. விரைவில் செய்கின்றேன்.

S. Philip Raja said...

nice!!!!!!!!!!!!!!!!!

பனித்துளி சங்கர் said...

ம்ம் மிகவும் அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள் . அருமை

நளினி சங்கர் said...

நன்றி பனித்துளி சங்கர்

ஆர். அபிலாஷ் said...

அருமையான கவிதை சங்கர். இக்கவிதையை நான் என் இணையபக்கத்தில் வெளியிட அனுமதி உண்டா?

நளினி சங்கர் said...

உங்கள் பாராட்டுக்கள் என் கவிதை முயற்சிக்கான மாபெரும் அங்கிகாரம் அபிலாஷ். தங்களுடைய இணையதளத்தில் வெளிவந்தால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்.

வருகைக்கு நன்றி

ஆர். அபிலாஷ் said...

என் நண்பர்கள் இணைந்து நடத்தும் பனிமுலை இணைதளத்தில் பிரசுரிக்கிறேன். நன்றி.
பார்க்க: www.panimulai.blogspot.com

நளினி சங்கர் said...

பனிமுலையில் 'அவனுடைய 43-வது பிறந்தநாளுக்குப் பிறகு...' இடம்பெற்றுள்ளதில் மகிழ்ச்சி. 'அவனது நாற்பத்தி மூன்றாவது பிறந்தநாளுக்குப் பிறகு' என தலைப்பை மாற்றி இருப்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? ஏற்கனவே இருந்த தலைப்பில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா? தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனே கேட்கின்றேன்?

நாணல் said...

தலைப்பின் விரிவாக்கம் கவிதையெனப் படுகிறது எனக்கு..
வாழ்த்துக்கள்..

நளினி சங்கர் said...

///////தலைப்பின் விரிவாக்கம் கவிதையெனப் படுகிறது எனக்கு..
வாழ்த்துக்கள்../////

புரியவில்லை... சற்று விளக்கமாக சொல்லவும். உங்கள் நேரம் உங்களை அனுமதிக்கும் பட்சத்தில்

நன்றி நாணல்...

நாணல் said...

//"அவனுடைய 43-வது பிறந்தநாளுக்கு பிறகு"//

ஒரு வரி தலைப்பை விரிவு படுத்தி கவிதையா எழுதியிருக்கீங்கன்னு சொல்ல வந்தேன்...

அண்மைய இடுகைகள்